நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக ஆளுநரை மாற்ற வேண்டாம். ஏனென்றால், அவர் பேசப் பேசத்தான் பாஜகவின் முகம் அம்பலப்படும்" என திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். "ஆளுநர் நம்மை அரசமைப்புக்கு எதிரானவர்களாக கட்டமைக்கும் பணியில் இறங்கியுள்ளார்" என்றார். முன்னதாக, தேசிய கீதம் அவமதிக்கப்படுவதாக கூறி தனது உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
0 கருத்துகள்