நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் சேகுவாரா & 2 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
"விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" சேகுவாரா யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக நடிகர் சங்க தலைவர் நாசர் புகாரளித்தார். முன்னதாக, 'மதகஜராஜா' பட புரமோஷனில் பங்கேற்ற நடிகர் விஷால் மிகவும் நடுக்கத்துடன் காணப்பட்டார்.
0 கருத்துகள்