ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஹிமானி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார். 27 வயதான அவர், படங்களை பகிர்ந்து "வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை என் குடும்பத்துடன் தொடங்கினேன்" என பதிவிட்டார். "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி" என்றும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்