அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் WHO-வில் இருந்து வெளியேறிய அமெரிக்கா


உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதற்கான நிர்வாக உத்தரவில் அந்நாட்டு புதிய அதிபராக 2வது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட WHO-விற்கு அமெரிக்காதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. COVID-19 தொற்றுநோயை கையாண்டதற்காக WHO-ஐ டிரம்ப் பலமுறை விமர்சித்துள்ளார். 1948 முதல் அமெரிக்கா WHO-வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்