டெல்லியின் புதிய முதல்வராக ஷாலிமார் பாக் எம்எல்ஏ ரேகா குப்தாவும், துணை முதல்வராக பர்வேஷ் வர்மாவும் பதவியேற்பார்கள் என பாஜக அறிவித்துள்ளது. பதவியேற்பு விழா பிப்ரவரி 20 அன்று நடைபெறுகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது.
0 கருத்துகள்