திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத சிறப்பு தரிசன டிக்கெட்; ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்யலாம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத சிறப்பு தரிசனம், அர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் செவ்வாய் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளன. மேலும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட் பிப்.21ம், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பிப். 24ம் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்களை TTD அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், போன்றவர்களுக்கான டிக்கெட் பிப்.22ல் வெளியிடப்படும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்