‘தக் லைஃப்' படத்திற்காக மணிரத்னம் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்


தக் லைஃப்' படம் குறித்து ரசிகர்களிடம் இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. "இப்படம் பார்த்து ஏமாந்த ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என மணிரத்னம் கூறியதாக செய்திகள் பரவியது. ஆனால் மணிரத்னம் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால் அவர் மன்னிப்பு கோரியதாக வரும் தகவல் தவறானது" என்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்