பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் Xல் வாழ்த்து கூறினார். ஆனால் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்பு மத்திய அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்படுமென கூறிய நிலையில், இத்தகவல் வந்துள்ளது. அண்ணாமலை கடந்த மே மாதம் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
0 கருத்துகள்