குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது எனவும், இது அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக கிஷோர் என்பவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனுமதியை ரத்து செய்தது.
0 கருத்துகள்