குன்றத்துாரில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து, ரோட்டில் கொட்டி வீணான பெட்ரோல், டீசல்


சென்னை, குன்றத்தூர் அருகே 12 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 8 ஆயிரம்

லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது. லாரி எண்ணூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்றபோது பின்பக்க டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிற வாகன ஓட்டிகள் லாரியில் சிக்கிய ஓட்டுநர் சூர்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்