விம்பிள்டனில் இருந்து வெளியேறிய உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா


உலகின் 12வது இடத்தில் உள்ள அமண்டா அனிசிமோவா, விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பைனலை எட்டினார். அனிசிமோவா 2 மணிநேரம் 37 நிமிடங்களில் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். "இந்த மைதானத்தில் போட்டியிடுவது எத்தனை கனவுகள். இது ஒரு பாக்கியம். பைனலில் இருப்பது விவரிக்க முடியாதது" என அனிசிமோவா கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்