ஆப்கானிஸ்தானில் 2021ல் தாலிபான் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அந்த அரசை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹாசனிடமிருந்து சான்றுகளை பெற்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. "இந்த துணிச்சலான முடிவு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். இப்போது அங்கீகார செயல்முறை தொடங்கிவிட்டது" என தாலிபான் அமைச்சர் அமீர் கான் முத்தாகி கூறினார்.
0 கருத்துகள்