டெல்லி முதல்வர் ரேகா குப்தா, யமுனை நதிக்கரையில் சட்டவிரோத சுரங்க பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார். சட்டவிரோத சுரங்க பணிகள், ஆற்றின் கரைகளை பலவீனப்படுத்தி வெள்ள அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார். இந்த விஷயத்தை மாநிலங்களுக்கு இடையேயானதாக குறிப்பிட்ட அவர், "தெளிவான எல்லைகள் இல்லாதது கண்காணிப்பு & நடவடிக்கையை சிக்கலாக்குகிறது" என்றார்.
0 கருத்துகள்